இன்று (28.06.2013) எமது பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கனகராணி தலைமை தாங்கினார்.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளியின் தற்போதைய
நிலை மற்றும் எதிர்கால கூடுதல் தேவைகள் பற்றியும் பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றம்
குறித்தும் விரிவாகப் பேசினார். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் : 1
நமது பள்ளி எல்லைக்குட்பட்ட கிராமங்களில்
உள்ள பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்திடவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட
அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் இடை நிறுத்தமின்றி தொடர்ந்து படித்திடச் செய்யவும்
உரிய நடவடிக்கை மேற்கொள்ளல்.
தீர்மானம் : 2.
தற்போது ஊராட்சி ஒன்றியம் மூலம் கட்டப்பட்டுவரும்
மாணவர்களுக்கான கழிவறைப் பணிகளை விறைந்து முடித்திட வேண்டி சம்மந்தப்பட்ட அலுவலர்களைக்
கேட்டுக்கொள்ளல்.
தீர்மானம் : 3.
தற்போது பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக்
குழாய் கிணற்றில் மோட்டார் பம்ப் பொருத்தித் தரவேண்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய
அலுவலர்களை கேட்டுக்கொள்ளல்.
கூட்டத்தின் இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர்
திருமதி சு. சாரதா அனைவருக்கும் நன்றி கூறினார்.