எமது பள்ளியில்
சர்வதேச கைகள் கழுவும் நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்கள்
பங்கு பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் இருந்து துவங்கி கிராமத்தின் முக்கிய
பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. அப்போது ஊர்வலத்தில் மாணவர்கள்
கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒலித்துக்கொண்டு
சென்றனர்.
பின்னர் பள்ளியில்
நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு
கைகள் மூலம் பரவும் நோய்கள் பற்றியும், சோப்பு போட்டு கைகள் கழுவ வேண்டிய அவசியம் பற்றியும்
விரிவாக எடுத்துக்கூறினார். பின்னர் கைகளில் உள்ள அழுக்கு மற்றும் பிற கிருமிகள் ஆகியவை
அனைவருக்கும் தெரியும் வகையில் சோதனை செய்துக் காட்டி, சரியாக கைகள் கழுவும் முறைகள் பற்றி விளக்கிக் கூறினார்.
அடுத்து பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் தத் தமது கைகளை சரியான முறையில்
சோப்பு போட்டுக் கழுவிக் காண்பிக்க பிறகு மற்ற மாணவர்களும் சரியான முறையில் கைகளை கழுவி
தினமும் இவ்வாறே கைகளை கழுவுவதாக உறுதி ஏற்றனர்.