ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி குறு வள மையத்தில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் துவங்கியது.
மைய ஒருங்கிணைப்பாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக மைய பொருப்பு ஆசிரி்யப் பயிற்றுநர் திரு க. சண்முகம் அனைவரையும் வரவேற்றார். விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு ச.வரதராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டார். மேலும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன், ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு கோட்டீஸ்வரன், ஆசிரியப் பயிற்றுநர் திரு பாக்கியராஜ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
3 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில் கெங்கபிராம்பட்டி, ஜோதிநகர், கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி, ஆகிய நடுநிலைப் பள்ளிகள், உப்பாரப்பட்டி உயர்நிலைப் பள்ளி, மண்ணாண்டியூர், தாண்டியப்பனூர், அப்பிநாயக்கன்பட்டி, பேயனூர், சின்னக் குன்னத்தூர், உப்பாரப்பட்டி,சந்தக்கொட்டாவூர் துவக்கப் பள்ளிகள் என 12 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றுள்ளனர்.
இப் பயிற்சி முகாமில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதைச் செயற்படுத்துவதில் பெற்றோரின் பங்கு, பள்ளி மேலாண்மைக் குழுவின் பணிகள் , குழந்தைகளின் உரிமைகள் போன்ற பல்வேறு கருத்துக்கள் பற்றி கலந்துரையாடல்கள் நடைபெற்றது.
ஒவ்வோர் நிகழ்வின் போதும் பள்ளி மாணவர்களின் திறன் வெளிபாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதைக் கண்ணுற்ற பெற்றோர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் பெரு மகிழ்வு கொண்டனர்.
இறுதியில் மைய உதவி ஒருங்கிணைப்பாளர் திரு பி. சிவன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.