இவ்வாண்டு ஆசிரியர் தினத்தன்று ஊத்தங்கரை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஒன்றியத்தில் உள்ள 5 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து ஒவ்வோர் பள்ளிக்கும் தலா இரண்டு மின்விசிறிகள் வழங்கப்பட்டது. முன்னதாக வங்கியின் கிளை மேலாளர் திரு எம். நவீந்திரன் அவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் தேவை மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் பள்ளிகளைத் தேர்வு செய்தார். அதன்படி சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை வங்கிக்கு வரவழைத்து அவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து பின்னர் மின் விசிறிகளை வழங்கினார்.
இந்நிகழ்வு இங்கு மட்டுமா? என வினவிய போது நமக்கு அதிர்ச்சி. காரணம் இந்தியாவில் உள்ள 16000 கிளைகளிலும் இது போல் ஒவ்வோர் கிளை சார்பிலும் 10 மின் விசிறிகள் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன என்றத் தகவல் கிடைத்தது. அப்படியானால் ஒரே நாளில் நாடு முழுமைக்கும் 1,60.000 மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் பெருமைபடத் தக்க நிகழ்வாகும். ஏற்கனவே பெண்குழந்தைகள் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் மூலம் அரசுப் பள்ளி பெண் குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவித்தொகை வழங்கிவரும் பாரத ஸ்டேட் வங்கி இது போல் இன்னும் பல நிகழ்வுகள் மூலம் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் அக்கறைச் செலுத்துமாக.