இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு. அ.வி. விஜயகுமார் அவர்கள் கணினி வழிக் கல்வி மையத்தைத் துவக்கி வைத்தார். இதன் மூலம் இப்பள்ளியின் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் கணினி பற்றிய கல்வியையும், கணினி மூலம் குறுந்தகடு வழி கல்வியையும் பெற்று தமது திறனை மென்மேலும் உயர்த்திக் கொள்ள உதவும் என்பது தின்னம்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக மற்றும் கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கணினி வழிக் கல்வி மைய பொறுப்பாசிரியர் திருமதி சி. தாமரைச் செல்வி செய்தார். இறுதியில் உதவி ஆசிரியர் சி. சிவா நன்றி கூறினார்.