வெள்ளி, 23 டிசம்பர், 2016

பள்ளியில் கிருஸ்துமஸ் - 2016 விழா
ஊத்தங்கரை ஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 23.12.2016 ல் கிருஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி த. லதா அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இயேசு கிருஸ்து தொடர்பான பல்வேறு செய்திகளையும், அவர் வாழ்வில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளையும் பட்டியலிட்டுக் காட்டி, அவரின் தியாகம் பற்றியும் விரிவாகக் கூறி, மாணவர்கள் அவரின் வாழ்க்கையை பின்பற்றியும், அவரின் கருத்துக்களை ஏற்றும் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு கிருஸ்துமஸ் கேக் வெட்டினார்.
பின்னர் உதவி ஆசிரியர்கள் திருமதி நா. திலகா, திருமதி மு. இலட்சுமி  திருமதி அ. நர்மதா ஆகியோரும் கிருஸ்துமஸ் குறித்து கருத்துரை வழங்கினர்.
 பின்னர் விழாவில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் கிருஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக