கிருஷ்ணகிரி மாவட்ட
அளவிலான பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் தகவல் தொடர்பு மற்றும் தொழிற்நுட்பப்
பயிற்சி (ICT) ஓசூர் அதியமான் பொறியியற் கல்லூரியில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில்
இருந்து தேர்வு செய்யப்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளச் சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கான மூன்று
நாட்கள் பயிற்சி முகாம் 23.11.2015 முதல் 25.112015 வரையில் நடைபெற்றது,
முதல் நாள் பயிற்சியை
முன்னதாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திரு பி. குமார் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் பயிற்சி மைய கருத்தாளர் திரு கோ. ஆனந்தகண்ணன் அவர்கள்
வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் இப்பயிற்சியின் நோக்கம் மற்றும் சிறப்புகள்
பற்றி எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் தலைமை உரை
நிகழ்த்திய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்
பயிற்சி நிறுவன முதல்வர் திரு பி. குமார் அவர்கள்
தமது உரையில் ஆசிரியர்கள் தற்போதைய புதிய தொழிற் நுட்பங்களை அறிந்துக் கொள்ள வேண்டியதன்
அவசியம் பற்றியும், அதை மாணவர்களுக்கு கற்பித்தலின் போது பயன்படுத்த வேண்டியதன் அவசியம்
பற்றியும் தமது அனுபவக் கருத்துக்கள் மூலம் விரிவாக எடுத்துக்கூறினார்.
அடுத்து நன்றியுரை
ஆற்றிய பயிற்சி மைய கருத்தாளர் திரு ஆர்.கே.
முரளிதரன் அவர்கள் மூன்று நாட்கள் பயிற்சியில் வழங்கப்பட உள்ள செய்திகள் குறித்து சுருக்கமாகக்
கூறி அனைவரையும் ஆர்வமூட்டினார்.
பயிற்சி முகாம்
ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளருமான
திரு நா. அசோகன் அவர்கள் பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்தும்,
வரவேற்றும் நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்தும் வழங்கினார்.
பின்னர் தொடங்கிய முதல்நாள் இரண்டாம் அமர்வில் முதல் நிகழ்வாக Pstory எனும் மென்பொருள் மூலம் நிழற்படங்களைக் கொண்டு நகரும் படக்கதைகள் எவ்வாறு உருவாக்குவது எவ்வாறு என செயல்முறை விளக்கங்களோடு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மேற்கொண்ட ஆசிரியர்கள் தாம் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த மற்றும் தற்போது பயிற்சியில் எடுக்கப்பட்ட நிழற்படங்களைக் கொண்டு புதிய நகரும் படக்கதைகள் ஒலியமைப்புடன் மிக்க ஆர்வத்தோடு உருவாக்கினார்கள்.
மதிய உணவிற்கு பின்னர் துவங்கிய பிற்பகல் வகுப்பில் Auto Collage என்ற மென்பொருள் மூலம் நமது நிழற்படங்களை எவ்வாறு ஒன்றினைப்பது என்பது பற்றி கருத்தாளர்கள் கற்பித்த அடுத்த சில நிமிடங்களிலேயே ஆசிரியர்கள் ஏற்கனவே தாம் தயார் நிலையில் வைத்திருந்த நிழற்படங்களை மென்பொருள் மூலம் ஒன்றினைத்து மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் Camtesia என்ற மென்பொருள் மூலம் கற்றல்/கற்பித்தல் ஒளி/ஒலிப்படங்களில் இருந்து ஒலியை மட்டும் தனியே பிரித்து எடுப்பது மற்றும் புதிய ஒலியை சேர்ப்பது போன்ற பயிற்சி அளித்தனர்.
இரண்டாம் நாள் முழுநாள் நிகழ்வும் தமிழ் விக்கிபீடியா பற்றியதாக இருந்தது. அதில் திரு இரவிசங்கர், கு.அருள்ராஜ் ஆகியோர் தமிழ் விக்கிபீடியா பற்றிய அறிமுகமும், அதன் பயன்பாடுகள் பற்றியும் மிகச் சிறப்பாக விளக்கினர். பின்னர் அதில் நாம் எவ்வாறு நமது பங்களிப்பை அளிப்பது என்றும் அதற்கான விதிமுறைகள் பற்றியும் விரிவாக விளக்கினர்

தொடர்ந்து பயிற்சியில்
பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் தமது பெயரில் ஓர் கணக்கை துவக்கி பின்னர் மணல் தொட்டியில்
தலா ஓர் கட்டுரையை எழுதி அதை சரிபார்த்து பின்னர் தமிழ் விக்கிபீடியா தளத்தில் வெளியிட்டு
மகிழ்ந்தனர்.. அத்தோடு தமிழ் விக்கிப்பீடியாவின் இணைப்புகளான விக்ஷனரி, விக்கிமூலம்,
விக்கிமீடியா காமன்ஸ் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் இன்று Nhm
Writer எனும் மென்பொருளை அறிமுகம் செய்து அதன் மூலம் தமிழ் எழுதும் முறைகள் குறித்தும்
விளக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வின்போது
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு தமிழரசன் அவர்கள் வந்து பயிற்சியை பார்வையிட்டு,
பயிற்சியின் தாக்கம் பற்றியும், இதை பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பது
எவ்வாறு? எனவும், இதன் மூலம் கல்வித் தரத்தை எவ்வாறு மேம்படுத்த இயலும் எனவும் ஆசிரியர்களோடும்,
கருத்தாளர்களோடும் விவாதித்து, பின் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.,
மூன்றாம் நாள் முழுமையும்
இப்பயிற்சியின் சிறப்பு நிகழ்வான HOT
POTOTOS எனும் மென்பொருள் அறிமுகமும் அதன் செயல்பாடுகள் பற்றியும் கற்பிக்கப்பட்டது.
வகுப்பறையில் மாணவர்களை
திறன் மதிப்பீடு செய்திட மிகவும் பயன்படும் இம்மென்பொருள் மூலம் பல்வேறு வகையான வினாத்
தொகுப்புகளை எவ்வாறு தயாரிக்கலாம் என செய்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மென்பொருள்
அனைத்து வகுப்பறைகளிலும் பயன் படுத்தப்பட்டால் மாணவர்கள் அதிக ஆர்வத்தோடு மதிப்பீட்டு
செயல்பாடுகளில் ஈடிபடுவார்கள் என்பது உறுதி.
மூன்று நாள் பயிற்சியின்
இறுதி நிகழ்வாக இடம்பெற்றது வலைப்பூ அறிமுகம் மற்றும் வலைப்பூ உருவாக்கம் என்பதாகும்.
இப்பயிற்சியை ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.
இராஜேந்திரன் அவர்கள் தமது பள்ளியின் வலைப்பூவான ”கல்விக்கோயில்” ஐ அறிமுகபடுத்தி,
பின்னர் வலைப்பூ எவ்வாறு உருவாக்குவது எனவும், அதில் நமது படைப்புகள் மற்றும் நிழற்படங்களை
எவ்வாறு உள்ளீடு செய்வது என்பது குறித்தும் விரிவாக விளக்கி, பின்னர் ”ICT கிருஷ்ணகிரி மாவட்டம்”
எனும் பெயரில் புதிய வலைப்பூவை உருவாக்கி அதில் செய்தியையும், நிழற்படங்களையும் பதிவேற்றம்
செய்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
மூன்றாம் நாளான இன்றைய நிகழ்வில்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திரு பி. குமார்
மற்றும் முதுநிலை விரிவுரையாளர் திரு து. மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆசிரியர்களுக்கு
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
மூன்று நாட்கள் பயிற்சியிலும்
கருத்தாளர்கள் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர்களை தேனீர் இடைவேளைக்கும்,
மதிய உணவு இடைவேளைக்கும் காட்டாயப்படுத்தியே வெளியேற்றவேண்டி இருந்தது, அதே நேரத்தில்
திரும்ப பயிற்சி அறைக்கு அவர்கள் அழைக்காமலேயே அவர்களுக்கு முன்னதாக வந்து அமர்ந்துவிட்ட
காட்சிகள் இதுவரையில் எந்த பயிற்சியிலும் பார்க்காதவை. இதற்கான காரணம் பயிற்சியில்
அவர்கள் காட்டிய ஈடுபாடு மட்டுமல்லாது, அனைவரும் தாமாக விரும்பி இப்பயிற்சிக்கு வந்தவர்கள்
என்பதும் கூட இருக்கலாம்.
பயிற்சி முகாம்
ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளருமான
திரு நா. அசோகன் அவர்கள் பயிற்சிக்கு வருகை புரிந்துள்ள அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்தும்,
வரவேற்றும் நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்தும் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக