வியாழன், 15 அக்டோபர், 2015

உலக கைகள் கழுவும் நாள் விழா - 2015இன்று 15.10.2015 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் உலக கைகள் கழுவும் நாள்  கடைபிடிக்கப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகம் முழுமையும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் தூய்மை செய்யப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உலக கைகள் கழுவும் நாள்  நிகழ்வு நடைபெற்றது. அதில் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  உலக கைகள் கழுவும் நாள்  கடைபிடிக்கப்படுவது குறித்தும், அதற்கு காரணம் மனிதர்களுக்கு பரவும் பல்வேறு வகையான நோய்களுக்கும், குறிப்பாக வயிற்றுப்போக்குக்கும் சரியாக கைகள் கழுவாமல் உணவு உட்கொள்வதுதான் என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் எவ்வாறு கைகளை கழுவ  வேண்டும் என செய்துக்காட்டி, இதே முறையில் தினமும் அனைவரும் கைகளைக் கழுவ வேண்டும்  எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் 1 முதல் 8 வரையில் பயிலும் மாணவர்கள் பலர் தாமாக முன்வந்து கைகளை கழுவும் முறைகளை விளக்கி அனைவருக்கும் செய்து காட்டினர்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. இலதா, திருமதி நா. திலகா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


1 கருத்து: