புதன், 16 செப்டம்பர், 2015

உலக ஓசோன் விழிப்புணர்வு நாள் விழாஇன்று 16.09.2015 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக ஓசோன் விழிப்புணர்வு நாள்  விழா  பசுமை விழா”வாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் நடப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில உலகம் முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் உலக ஓசோன் நாள்  விழா கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் இன்றைய சுற்றுச்சூழலைக் காப்பது நமது அனைவரின் கடமை என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெறுவதோடு அதற்கான சரியான செயல் திட்டங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில்தான் நமது பள்ளியில் தற்போது இவ்விழா பசுமை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
பின்னர் மாணவர்கள் ஓசோன் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. இலதா, திருமதி நா. திலகா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

                இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.


1 கருத்து:

 1. அன்பின் இனிய
  விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
  நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு