வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பாரதியார் நினைவு நாள்இன்று 11.09.2015 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் நினைவு நாள்  கடைபிடிக்கப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரதியாரின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  பாரதியாரின் நினைவு நாள் கடைபிடிக்கப்படுவது குறித்தும், அதற்கு காரணம் பாரதியாரின் தன்னலமற்ற பங்களிப்புதான் என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரதியார் நினைவு நாளை ஒட்டி அவரின் திருஉருவப் படத்திற்கு  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. இலதா, திருமதி நா. திலகா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


2 கருத்துகள்: