திங்கள், 17 நவம்பர், 2014

சாதிச் சான்று வழங்கும் விழா........

 

          ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 17.11.2014 ல் மாணவர்களுக்கான சாதிச் சான்று வழங்கும் விழா நடைபெற்றது.
            தமிழக அரசின் மின் ஆளுகை திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையைச் சார்ந்த அனைத்து சான்றிதழ்களும் வட்டாட்சியர் அலுவலம் செல்லாமலேயே கணினி மையம் மூலம் பெறலாம். அதன்படி எமது பள்ளியில் தற்போது ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ்களை எமது பள்ளியின் இணைய இணைப்பின் மூலம் பள்ளியிலேயே விண்ணப்பித்து  அவை ஏற்பு செய்யப்பட்ட பின்னர் பள்ளியிலேயே பதிவிரக்கமும் செய்து  அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித கட்டணமும் பெறாமல் வழங்கப்பட்டுள்ளது. வெறும் தாளில் அச்சிடப்பட்ட அச்சான்றிதழ்கள் அனைத்தும் அழகிய முறையில் லேமினேசன் செய்யப்பட்டு இன்று பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

         இச்சான்றிதழ்கள் வழங்கும் விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் தலைமை தாங்கி அனைவருக்கும் சாதிச் சான்றிதழ்களை,வழங்கினார்.

       விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, செல்வி த. இலதா, திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக