திங்கள், 13 அக்டோபர், 2014

கொடுப்பதில் மகிழ்வு வாரவிழாஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலைப்பூ : www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல் : pumsjothinager@gmail.com
இன்று (13.10.2014) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழாமிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி மாணவர்களிடம் பிறர்க்கு உதவும் மனப்பான்மையை ஏற்படுத்தவும், அடுத்தவர்க்கு கொடுப்பதன் மூலம் தாம் மகிழ்ச்சி கொள்ளும் பண்பை வளர்த்திடவும் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது . அதன்படி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது உரையில் இவ்விழாவின் நோக்கம் பற்றியும், அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார். தொடர்ந்து அவர் தமது உரையில்  அடுத்தவரிடமிருந்து நாம் பெறும்போது நாம் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறோம், ஆனால் நாம் அடுத்தவருக்கு கொடுப்பதன் மூலம் பெற்றவர் மகிழ்ச்சி அடைவதோடு அவருடன் சேர்ந்து நாமும் மகிழ்ச்சி அடைகிறோம் இதன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி நமக்கு கிடைக்கிறது எனக் கூறினார்.
பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் பள்ளியின் மூலம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மாணவர்கள் தாம் தயாரித்து கொண்டுவந்திருந்த கலைப் பொருட்களை தமக்கு பிடித்த நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு இரா. முரளி, திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.   2 கருத்துகள்:

 1. ஆகா
  அற்புதமான விழா
  ஆசிரியர் என்ற முறையில் மிகவும் பெருமைப்படுகிறேன்
  தங்களுக்கும் தங்கள் பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர

  பதிலளிநீக்கு
 2. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

  http://blogintamil.blogspot.in/2014/11/dh-ch.html

  நட்புடன்

  வெங்கட்.
  புது தில்லி.

  பதிலளிநீக்கு