வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

68 வது இந்திய சுதந்திர தின விழா......
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று இந்திய திருநாட்டின் 68 வது சுதந்திர தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக காலை பள்ளியில் தேசியக் கொடியை ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு   இரா. பிரசாத் அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்னர் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. அதில் பள்ளி 1 முதல் 8 வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றனர்.  
அதன் பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பட்டதாரி உதவி ஆசிரியர் திரு இரா. முரளி அனைவரையும் வரவேற்றார்.  விழாவின் போது மாணவர்கள் சுதந்திர தினம் தொடர்பான பாடல்கள், கவிதைகள், பேச்சு ஆகியவற்றை வழங்கினர். பின்னர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இறுதியில் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல். திருமதி அ. நர்மதா மற்றும் கிராமக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்துக்கொண்டனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக