வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஆசிரியர் தின விழாகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜெந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் திருமதி சு. சாரதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பின்னர் தலைமை உரையாற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் ஆசிரியர் தினவிழாவின் முக்கியத்துவம் மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் திறன், அவரின் சேவை  ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசினார். பின்னர்
பின்னர் பள்ளி மாணவர்கள் தத்தமது கவிதைகள், பாடல்கள், மற்றும் பேச்சு மூலம் ஆசிரியர் தினத்தை நினைவு கூர்ந்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக்கொண்ட ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கோ.மா. சீனிவாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு சி சிவராமன் ஆகியோர் ஆசிரியர் தினம் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
அடுத்து விழா நிகழ்வில் பங்குபெற்ற மாணவர்களுக்கும், சதுரங்கப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ப. சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக