வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

வாருங்கள்… வாழ்த்துங்கள்……


ஊத்தங்கரையில் இயங்கி வரும் விடுதலை வாசகர் வட்டம் என்ற அமைப்பு மாதம்தோறும் ஓர் நிகழ்வை நடத்தி வருகிறது. அதில் அந்தந்த மாதத்தின் சிறப்பு நாட்கள் மற்றும் சிறப்பாளர்களின் பிறந்த நாட்களை அடிப்படையாக வைத்து கருத்தரங்குகளும், படத் திறப்பும், ஊரின் சிறந்த சாதனையாளர்களை அடையாளம் காட்டிடும் வகையில் மாதம் ஒருவரைத் தேர்வு செய்து அவருக்கு பாராட்டு விழாவும் நடத்துகிறது. அவ்வகையில் இம்மாதம் 19.08.2012 உலக மனிதநேய நாள் ஆதலால், உலக மனித நேயக் கருத்தரங்கமும், 26.08.2012 திரு.வி.க. பிறந்த நாள் ஆகையால், தமிழ்த் தென்றல் திரு.வி.க படத்திறப்பும் கவி.செங்குட்டுவன் ஆகிய எனக்கு பாராட்டு விழாவும் வரும் 26.08.2012 ஞாயிறு அன்று நடத்த உள்ளனர். எனவே அவ்விழாவில் அனைவரும் பங்கு பெற்று விழாவினைச் சிறப்பிக்கவும், என்னை வாழ்த்திடவும் அன்புடன் வேண்டுகிறேன். அழைப்பு இணைத்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக