சனி, 13 பிப்ரவரி, 2016

நாளிதழ்களில் எமது பள்ளிச் செய்தி......

 
 தினகரன் நாளிதழ்
         எமது பள்ளியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் விழா தொடர்பான செய்திகள் தினகரன், தினமணி, தினச் சுடர் ஆகிய நாளிதழ்களில் வண்ணப்படம் மற்றும் கருப்பு வெள்ளை படங்களுடன் வெளிவந்துள்ளது. செய்தி வெளியிட்ட தினகரன், தினமணி, தினச்சுடர் நாளிதழ்களின் செய்தி ஆசியர்களுக்கும் செய்தி முகவர்களுக்கும் நன்றி......
 தினச்சுடர் நாளிதழ்
தினமணி நாளிதழ்

புதன், 10 பிப்ரவரி, 2016

தேசிய குடற்புழு நீக்க நாள்.....,

              ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று 10.02.2016ல் கடைபிடிக்கப்பட்டது......
          பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
              பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் தேசிய குடற்புழு நீக்க நாளின் அவசியம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றியும், வயிற்றில் காணும் குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் இந்தியா முழுதும் இன்று 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை போது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மேற்கொண்டு உள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.
               பின்னர் பேசிய கிராம சுகாதார செவிலியர் திருமதி கௌரி அவர்கள் பொது மக்களின் நோய்கள் தடுப்பதில் சுகாதார துறையின் பணிகள் பற்றி பேசினார்.
                பின்னர் பள்ளியில் இருந்த அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
            நிகழ்வில் கிராமக் கல்விக் குழு தலைவர் திரு தி. பூபதி, உதவி ஆசிரியர்கள் திருமதி நா.திலகா, த. லதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

















செவ்வாய், 26 ஜனவரி, 2016

67 வது இந்திய குடியரசு தின விழா




ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2016) 67வது இந்திய குடியரசு தினவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை சரியாக 9.00 மணிக்கு பள்ளியில் இந்திய தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி நா. திலகா, திருமதி த. லதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு குறித்தும், இவ்விழா நடத்தப்படுவதன் காரணம் குறித்தும் விரிவாக விளக்கியதோடு நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகங்கள் குறித்தும் கூறி அதுபோல மாணவர்களும் சமுதாயத் தொண்டு ஆற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் இந்தியக் குடியரசு தின விழா குறித்து உரையாடினர், மேலும் தேசபக்திப் பாடல்களைப் பாடினர், அடுத்து   தேசபக்திப் பாடல்கள் பாடும் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி   ஆகியவற்றில் வெற்றி பெற்ற  பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளி கிராமக் கல்விக்குழுத் தலைவர் திரு டி. பூபதி, சத்துணவு அமைப்பாளர் திரு பீமன் உள்ளிட்ட பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.