சனி, 9 ஜூலை, 2011

கிராமக் கல்விக் குழுக் கூட்ட முடிவுகள்.







ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி
   கொட்டுகாரம்பட்டி ஊத்தங்கரைஒன்றியம்.
    கிராமக் கல்விக் குழுக் கூட்டமுடிவுகள்.

இன்று 24.06.2011இப்பள்ளியின் கிராமக் கல்விக் குழுக் கூட்டம் அதன் தலைவரும், மூன்றம்பட்டிசிற்றூராட்சி மன்றத் தலைவருமான திருமதி நா. இராதா நாகராஜன் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. கூட்டத்தில் முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியரும் கிராமக் கல்விக் குழுச்செயலாளருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளியின் தற்போதையவளர்ச்சி நிலைகள் பற்றியும், எதிர்காலச் செயல் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.பின்னர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்ட குழு உறுப்பினர்களின்கருத்துரைக்கு பின் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1.
                நமதுபள்ளியை மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் சிறந்த பள்ளியாகச் செயல்படுத்தி வரும்பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து உதவி ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத்தெரிவிப்பதோடு இனி வருங்காலங்களில் பள்ளி வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் மேற்கொள்ளும்எல்லா நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை தரவும் முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் : 2.
                இப்பள்ளிமாணவர்களின் இணைய வழிக் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் வகையில் பள்ளிக்குஅகன்ற கற்றை இணைய இணைப்பு கிராமக் கல்விக் குழு மூலமாகப் பெற்றுத் தருவதென முடிவுசெய்யப்படுகிறது.
தீர்மானம் : 3.
                இவ்வாண்டுக்குஅனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் பள்ளிக்கு வழங்க உள்ள பள்ளி மானியத் தொகையில்கீழ்க் கண்ட செலவினங்கள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்படுகிறது.
1.      1 முதல் 5 வரை பயிலும்மாணவர்கள் அமர பாய்கள் மற்றும் செயல் வழிக் கல்விக்கான டிரேக்கள் வாங்குதல்.
2.      ஆரோக்கியச் சக்கரப்பொருட்கள் வாங்குதல்.
3.      செயல்வழிக் கற்றலுக்கான உள்/வெளிவிளையாட்டுப் பொருட்கள் வாங்குதல். மற்றும் சிலந்தி அட்டைச் செயல்பாட்டுக்கானசோதனைப் பொருட்கள் வாங்குதல்.
4.      6 முதல் 8 வகுப்புமாணவர்களுக்கான  வரைபடங்கள் மற்றும்அறிவியல் சோதனைப் பொருட்கள் வாங்குதல்.
5.      விளையாட்டுப் பொருட்கள்வாங்குதல்.
6.      புதிதாக ஓர் மின் விசிறிவாங்குதல்
7.      பழுதான மின்விளக்குகளுக்கு மாற்றாக புதிய மின் விளக்குகள் வாங்குதல்.
8.      பழுதான தொலைக் காட்சிப்பெட்டி மற்றும் டிவிடி அகியவற்றை பழுது நீக்குதல்.
9.      பள்ளிக்குத் தேவையானவெள்ளை மற்றும் வண்ணச் சுண்ணக் கட்டிகள் வாங்குதல்.
தீர்மானம் : 3.
                அனைவருக்கம்கல்வித் திட்டம் மூலம் வழங்கப்படும் பள்ளி பராமரிப்பு மானியத்தில் கீழ்க் கண்டசெலவினங்கள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்படுகிறது.
1.      குடிநீர் மற்றும் கழிவறைகுழாய்கள் பழுது நீக்குதல்.
2.      பழுதடைந்துள்ள கழிவறைக்கதவுகளை புதிதாக மாற்றுதல்.
3.      பள்ளிக் கட்டிடங்கள் 3க்கு வெள்ளை அடித்தல் மற்றும் கதவு சன்னல்களுக்கு வர்ணம் அடித்தல்.
4.      தாழ்நிலை மற்றும் மேல்நிலைக்கரும்பலகைகளுக்கு வர்ணம் அடித்தல்
5.      தோட்டப் பயன்பாட்டுக்கானமண்வெட்டி, செடிகளைக் கத்தரிக்கும் கத்தரி மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்குதல்.
6.      பள்ளிப் பெயர்ப் பலகை,இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் பெயர்ப் பலகை, சுற்றுச் சூழல் மன்றம் பெயர்ப் பலகைஆகியவற்றை எழுதுதல். 

  இறுதியில்பள்ளி உதவி ஆசிரியர் திரு பி. பாண்டுரங்கன் அனவருக்கும் நன்றி கூறினார்.
           கூட்டத்தில்பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும்கலந்துக்கொண்டனர்.







திங்கள், 4 ஜூலை, 2011

பள்ளி படிப்பு நிறைவு மாணவர்கள்

எமது பள்ளியில் படித்து 5 மற்றும் 8 ஆம் வகுப்பு நிறைவு செய்து வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பள்ளித் தலமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களுடன் எடுத்துக்கொண்ட நிழற் படங்கள்.
                                                    அய்ந்தாம் வகுப்பு மாணவர்கள்
எட்டாம் வகுப்பு மாணவர்கள்

ஞாயிறு, 26 ஜூன், 2011

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

எமது பள்ளியில் 24.06.2011 - ல் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் தமது உரையில் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி நிலைகள் குறித்தும் இவ்வாண்டுக்கான புதிய செயல் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். பின்னர் பேசிய பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராஜன் ஆகியோர் பள்ளியின் வளர்ச்சி நிலை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறி பாராட்டுத் தெரிவித்தனர். பின்னர் பள்ளி பெற்றோர்களின் கருத்துரைகளுக்குப் பின் உதவி ஆசிரியர் திரு பி. பாண்டுரங்கன் அனைவருக்கும் நன்றி கூறினார்.





 

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் சிறந்த மேற்பார்வையாளருக்கான பாராட்டு.

    பள்ளித் தலைமையாசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு வி அருண்ராய் அவர்கள் பரிசளிக்கும் காட்சி. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சி.பிரகாசம் மற்ரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்.

               கடந்த 1 சூன் 2010 முதல் 28 பிப்ரவரி 2011 வரையில் நமது இந்திய நாடு முழுமையும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணி மிகத்தீவிரமாக நடைபெற்றது. எமது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அப்பணி இரண்டு கட்டங்களாக மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
                   இப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் ஆகிய எனக்கு வழங்கப்பட்டது. சிறந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணி மேற்பார்வையாளர்   என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரால் அறிவிக்கப்பட்டு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.

திங்கள், 28 மார்ச், 2011

நலமாய் வாழக் கற்றுக் கொள்வேன் - கற்றுக்கொடுப்பேன்


எமது பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான “நலமாய் வாழக் கற்றுக் கொள்வேன் - கற்றுக் கொடுப்பேன்” எனும் தலைப்பிலான பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் துவங்கிய இம்முகாமில் பள்ளி மாணவர்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வும், எளீய மருத்துவச் சிகிட்சை முறைகளும் குறித்த பல்வேறு கருத்துக்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது மாணவர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். பின்னர் பள்ளி மாணவர்கள் தத்தமது உயரம் அதற்கேற்ற உடல் எடைபற்றி அறிந்துக்கொண்டனர். அதற்கென பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டுள்ள எடைக் கருவி, உயரம் அளந்திடும் அளவுகோள் ஆகியவற்றை மாணவர்களே பயன்படுத்தி தமது அளவீடுகளை அறிந்ததோடு மற்ற மாணவர்களின் அளவீடுகளையும் அளந்து கூறியது பயனுடையதாய் அமைந்தது. இப்பயிற்சியின் பொருப்பாசிரியரான திருமதி சி.தாமரைச்செல்வி அவர்கள் அனைத்து மாணவர்களையும் ஒருங்கினைத்து அவர்களுக்குத் தேவையான மருத்துவக் குறிப்புகளையும், பிற ஆலோசனைகளையும் கூறினார். இப்பயிற்சிக்கென பள்ளியில் முதலுதவிப் பெட்டி, வீட்டு மருத்துவம் தொடர்பான இயற்கை மருத்துவப் பொருட்கள் அடங்கிய பெட்டி ஆகியன பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.