செவ்வாய், 26 நவம்பர், 2019

இந்திய அரசியல் அமைப்பு நாள் உறுதிமொழி.......











             ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று "இந்திய அரசியல் அமைப்பு நாள் உறுதிமொழி" மேற்கொள்ளப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்......







வியாழன், 21 நவம்பர், 2019

மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்குதல் - துவக்க விழா


இன்று (21.11.2019) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் *ஸ்ரீ சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை* சார்பில் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.

            பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு ஜி.எம். சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.  

பின்னர் பேசிய தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில், பள்ளி மாண்வர்களுக்கு காலை உணவின் அவசியம் குறித்தும், உடலும் உள்ளமும் சோர்வில்லாமல் துடிப்பாக இருந்தால்தான் மகிழ்ச்சியாக கல்வி கற்றிட இயலும்  என்றும் விளக்கி, தினமும் காலை உணவை மாணவர்களுக்கு வழங்கிட முன் வந்துள்ள ஸ்ரீ சத்யசாய் அண்ணபூர்ணா அறக்கட்டளை நிர்வாகத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

                தொடர்ந்து பேசிய பெங்களூர் ஸ்ரீ சத்யசாய் அண்ணபூர்ணா அறக்கட்டளையின் பகுதி ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன் அவர்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தும், சேவைகள் குறித்தும் விளக்கி அவற்றை அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொண்டார்.
     பின்னர் அனைவருக்கும் இன்றைய காலை உணவான அரிசி ரவை உப்புமா சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டது.
     இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.






























சனி, 16 நவம்பர், 2019

விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா…..


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விலையில்லா வண்ண புத்தகப் பைகள் மற்றும் வண்ண எழுதுகோள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர் வே. இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
வண்ண புத்தகப் பைகளைப் பெற்றுக் கொண்ட எமது பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்வோடு பள்ளி வளாகத்தில் நிழற்படம் எடுத்துக் கொண்டனர்.