புதன், 31 ஜூலை, 2019

பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள்


இன்று 31.07.2019 ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி விளையாட்டு மன்றம் சார்பில் மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்த லைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று பள்ளியில் நடத்தப்படும் சதுரங்கப்போட்டிகள் பற்றி எடுத்துக்கூறி மாணவர்கள் சதுரங்கம் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், இதனால் மாணவர்களின் சிந்தனைத்திறன், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் ஆகியவை வளரும் என்பது பற்றியும் கூறி அனைவரும் அவசியம் இவ்விளையாட்டில் ஈடுபடவேண்டும் எனவும் எடுத்துக் கூறினார்.
அடுத்து 3,4,5 வகுப்பு மாணவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித் தனி அணிகளாகவும், 6,7,8 வகுப்பு மாணவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித் தனி அணிகளாகவும், போட்டியில் ஈடுபட்டனர். மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற போட்டியில் இறுதியில் இரண்டு ஆண்கள் அணியும், இரண்டு பெண்கள் அணியும் தேர்வு செய்யப்பட்டது. அதில் 3,4,5 வகுப்பு ஆண்கள் பிரிவில் செ. லோகேஷ், ஜெ. சஞ்சய் ஆகியோரும், பெண்கள் பிரிவில ச. ஆராதனா, க. ரேஷ்மா ஆகியோரும், 6,7,8 வகுப்பு ஆண்கள் பிரிவில் வே. தினேஷ், செ. பெருமாள்  ஆகியோரும், பெண்கள் பிரிவில் ச. இதம், கு. காவியா ஆகியோரும் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்.
பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு வே. இராஜ்குமார், திரு ஜி.எம். சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்



















திங்கள், 15 ஜூலை, 2019

கல்வி வளர்ச்சி நாள் விழா - 2019



இன்று 15.07.2019 திங்கட்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் கர்ம வீரர் காமராசரின் 117வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.  இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, திருமதி ந. திலகா ஆகியோர் காமராசர் குறித்தும் அவரின் பணிகள் குறித்தும் கருத்துரை வழங்கினர்.   
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.  இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் கொண்டாடப்பட்டு வரும் கல்வி வளர்ச்சி நாள் விழா குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாளில் பிறந்த கர்ம வீரர் என்று அனைவராலும் போற்றப்படும் காமராசர் குறித்தும் விரிவாக விளக்கி இவ்விழா கொண்டாடப்படுவதன் அடிப்படை வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை பின்பற்றி நடக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தை செயற்படுத்தும் நோக்கத்தில், பள்ளி வளாகத்தில் கைப்பம்பு மூலம் வெளியேறும் உபரி நீரை சேகரிக்கும் குழி மாணவர்கள் மூலம் அமைக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சி நாள் குறித்தும் காமராசர் குறித்தும் சிறப்பாக பேசியும், பாடல்களைப் பாடியும் விழாவை சிறப்பித்தனர்.
பின்னர் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட ஊத்தங்கரை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு ப. சிவப்பிரகாசம் சிறப்புரை ஆற்றிவிட்டு, பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
                இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி ச. இதம் அனைவருக்கும் நன்றி கூறினார்.