செவ்வாய், 13 மார்ச், 2018

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்             
ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி குறுவள மையம் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் கெங்கபிராம்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முன்னதாக காலை மைய ஒருங்கிணைப்பாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் துவங்கிய பயிற்சி முகாமில் கெங்கபிராம்பட்டி தலைமை ஆசிரியர் திருமதி மா. அனுசுயா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பயிற்சி முகாமில் மைய ஆசிரியப் பயிற்றுனர் திரு ப. சிவப்பிரகாசம் அவர்கள் பயிற்சி முகாமின் அவசியம் குறித்தும்,  பள்ளி மாணவர் சேர்க்கை குறித்தும் விவரித்தார், மைய ஒருங்கிணைப்பாளரும் ஜோதிநகர் தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் பள்ளி வளர்ச்சியில் மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பங்கு மற்றும் அவர்களுக்கான அதிகாரங்கள் பற்றியும் அரசு பள்ளிகளைக் காக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பண்முக திறன் வளர் பயிற்சிகள் பற்றியும் விரிவாகக் கூறி பயிற்சி முகாமை நடத்தினார்.
முகாமில் ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ், ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருமதி செ. வசந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்டனர்.

மேலும் பயிற்சி முகாமில் ஜோதிநகர், கெங்கபிராம்பட்டி, கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி, தாண்டியப்பனூர், அப்பிநாயக்கன்பட்டி, மண்ணாண்டியூர், உப்பாரப்பட்டி, பேயனூர், சந்தக்கொட்டாவூர், சின்னக்குண்ணத்தூர் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், அப்பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளிக்கு தலா 5 பேர் என மொத்தம் 72 பேர் கலந்துக்கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக