செவ்வாய், 3 அக்டோபர், 2017

பள்ளியில் சரஸ்வதி பூசை நாள்விழா....இன்று 03.10.2017 செவ்வாய்க்கிழமை ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் சரஸ்வதி பூசை (விஜயதசமி) விழா கொண்டாடப்பட்டது.
 
முன்னதாக முதல் பருவ விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் வரவேற்பு அளித்து இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளியில் தொடர்ந்து பள்ளியில் சரஸ்வதி பூசை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளியில் படிக்கும்  அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள் வழங்கப்பட்டது.

விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. இலதா, திருமதி ந. திலகா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக