புதன், 22 பிப்ரவரி, 2017

ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி முகாம்......

            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுகாதாரத் துறை மூலம் 1 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு  ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டது.
          காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருமதி பத்மபிரியா அவர்கள் தலைமையில் கிராம சுகாதார செவிலியர்கள் திருமதி கௌரி, திருமதி கலைச்செல்வி, ஊட்டச் சத்து பணியாளர்கள் திருமதி முருகம்மாள், திருமதி வரலட்சுமி ஆகியோர் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போட்டனர். முன்னதாக முகாமை ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.
           இம்முகாமில் ஜோதிநகர், மண்ணாண்டியூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட 127 பேர் பயன் பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஜோதிநகர் பள்ளி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி ந. திலகா, திருமதி த. லதா, திருமதி அ. நர்மதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் செய்தனர்.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக