வெள்ளி, 2 செப்டம்பர், 2016

ஆசிரியர் தினவிழா - 2016
இன்று 02.09.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஆசிரியர் தினவிழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினவிழாவாக கொண்டாதுவது பற்றி எடுத்துக் கூறி அவரின் வாழ்க்கை, தத்துவங்கள், நாட்டுக்கு அவர் செய்த கல்விச் சேவைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  ஆசிரியர் தினவிழா தொடர்பாக  எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ற தலைப்பில் தமது ஆசிரியர்களை பற்றி கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின சிறப்பு பரிசுகள் பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது.
விழாவில் உதவி ஆசிரியர்கள் ந. திலகா, அ. நர்மதா, திரு வே. வஜ்ஜிரவேல்  ஆகியோரும், மாணவர்களும் கலந்துக்கொண்டனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி த. லதா அனைவருக்கும் நன்றி கூறினார்.