வியாழன், 11 ஆகஸ்ட், 2016

முத்து விழா ஆண்டு நிறைவு நாள் விழா.....


  இன்று 11.09.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியேற்ற முத்து விழா ஆண்டு நிறைவு நாள்  விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகளை நிறைவு செய்யும், முத்து விழா ஆண்டு நிறைவுநாள் விழாவிற்கு பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில்,பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்      இன்றைய முத்துவிழா ஆண்டு நிறைவுநாள் பற்றி எடுத்துக் கூறி தான் பணியேற்று முப்பது ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் கூட இன்றும் நான் புதிதாக பணியேற்ற ஆசிரியராகவே உணர்கிறேன் என்றும், தமது பணிக்காலத்தில் மேற்கொண்ட பல்வேறு சிறப்புப் பணிகளையும் பட்டியலிட்டு கூறியதோடு இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் தன்னை பின்பற்றுவதை விட தனது பணியை தொடர வேண்டுமென கேட்டுகொண்டார்.

பின்னர் கடந்த ஆண்டு இதே நாள் 30ம் ஆண்டு தொடக்க நாளில் இவ்வாண்டு பள்ளியில் 30க்கு குறையாமல் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டுமெனவும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் இவ்வாண்டு 37 சிறப்பு நிகழ்ச்சிகள்  நடந்துள்ளதை பட்டியலிட்டு காட்டி அதற்கு துணை நின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றியைக் கூறினார்.
பின்னர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ளும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பும், நினைவு பரிசுகளும் வழங்கினார்.

தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு  சந்தன மாலையோடு சால்வை போர்த்தி மரியாதை செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஒருசில செயற்பாடுகளில் தனக்கு உடன்பாடில்லை என்றாலும் கூட  அதைச் செய்பவர்களின் மன மகிழ்ச்சிக்காக ஏற்க வேண்டிய சூழல் அமைந்து விடுகிறது. அதில் ஒன்றுதான் இன்று அன்பின் மிகுதியால் எனது உதவி ஆசிரியர்கள் எனக்கு  இட்ட மனக்கும் சந்தன மாலையும், மயக்கும் சால்வையும்கூட.

விழாவில்  உதவி ஆசிரியர்கள் திருமதி த.லதா, அ.நர்மதா  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக