திங்கள், 15 ஆகஸ்ட், 2016

70 வது இந்திய சுதந்திர தின விழா.....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 15.08.2016 இந்திய திருநாட்டின் 70 வது சுதந்திர தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக காலையில் பள்ளியில் தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதன் பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 70வது சுத்தந்திர தின விழாவில் விழாவில் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். 
தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் போராட்ட தியாகிகள் பற்றி விரிவாக விளக்கினார்.   விழாவின் போது மாணவர்கள் பாரதமாதா, மகாத்மா காந்தியடிகள், பண்டிட் ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி ஆகியோர் போல வேடமிட்டு வந்து பார்வையாளர்கள் அனைவரையும் பரவசப்படுத்தினர். தொடர்ந்து சுதந்திர தினம் தொடர்பான பாடல்கள், கவிதைகள், பேச்சு ஆகியவற்றை வழங்கினர்.
பின்னர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர் திரு ஆர். சிவப்பிரகாசம் அவர்கள்  சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். அடுத்து பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கு. ஆனந்தி, உதவி ஆசிரியர்கள் வே. வஜ்ஜிரவேல், ந. திலகா, த. லதா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  
பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. .
விழாவில் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர் திரு சிவப்பிரகாசம் அவர்கள் ரூபாய் 1,000 /- பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி பள்ளியின் புரவலர் திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.


1 கருத்து:

  1. அனைவருக்கும் வணக்கம்

    புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

    நன்றி

    நமது தளத்தை பார்க்க Superdealcoupon

    பதிலளிநீக்கு