திங்கள், 25 ஜூலை, 2016

டெங்கு விழிப்புணர்வு முகாம்இன்று 21.07.2016l ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உடல் நலச் சங்கம்  சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று நாடு முழுவதும் பரவலாக பாதிப்புக்கு உள்ளாக்கும் டெங்கு காய்ச்சல் பற்றியும், அதை தடுப்பதற்கான பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துக்கள், நாம் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.
அடுத்து சிறப்பு அழப்பாளராகக் கலந்துக்கொண்ட காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் திரு மு. துரைராஜ் அவர்கள் டெங்கு காய்சல் பரவும் முறைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் அதை தடுப்பதற்கான வழிகள் ஆகிவற்றையும், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பொதுவான சுகாதார விழிப்புணர்வுக் கருத்துக்களையும் தனது சிரப்புரையில் வெளிப்படுத்தினர்.
விழாவில் பங்கேற்ற ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு சி. சிவபிரகாசம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்
பின்னர் மாணவர்கள் தமது சந்தேகங்களையும், சுகாதாரம் தொடர்பான கருத்துக்களையும் கலந்துரையாடல் மூலம் வெளிப்படுத்தினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, அ. நர்மதா, திரு வே. வஜ்ஜிரவேல்  ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக