ஞாயிறு, 1 மே, 2016

2015 -16 கல்வியாண்டு நிறைவுநாள் விழா




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (30.04.2016) ”2015–16 கல்வியாண்டு நிறைவுநாள் விழா” கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக எட்டாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் கல்வியாண்டு நிறைவுநாள் தொடர்பான கருத்துக்களையும் அவை கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் கற்றல் என்பது ஓர் குறிப்பிட்ட காலம் மட்டும் நிகழக்கூடியது அல்ல எனவும், தனது வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடியது எனவும் கூறி மனித குலத்திற்கு மிகவும் பயன் தரும் கல்வியை நாளும் நாம் தொடர வேண்டும் எனக்கூறி தெளிவாக விளக்கினார்.
பின்னர் மாணவர்கள் இப்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மூலம்.தாம் பெற்ற அனுபவங்கள் மற்றும் அறிவார்ந்த கருத்துக்கள் ஆகியவற்றை உணர்ச்சிபூர்வமாக கூறினர்.
விழாவில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் எழுது பொருட்கள் உள்ளிட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, ந. திலகா த. லதா திரு வே, வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் எட்டாம் வகுப்பு மானவர் பூ. தமிழரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.