வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பாரதிதாசன் பிறந்தநாள் விழா.
இன்று 29.04.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா  நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பற்றி எடுத்துக் கூறி அவரின் கவிதை, கதை, பாடல்கள் எழுதும் ஆற்றல் பற்றியும், பாரதிதாசன் படைப்புகளில் காணும் புதுமை, புரட்சிகரமான விழிப்புணர்வுக் கருத்துக்கள் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  பாரதிதாசன் பிறந்தநாள் தொடர்பாக தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர் கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
   விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, அ. நர்மதா, திரு வே. வஜ்ஜிரவேல்  ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.  


செவ்வாய், 19 ஏப்ரல், 2016

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம்...


            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 18.04.2016 ல் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது.
            இப் பயணத்தில்  ஜோதிநகர், நாச்சக்கவுண்டனூர்,காமராஜ் நகர், கெங்கி நாயகன்பட்டி ஆகிய கிராமங்களிலும், மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படும் ஏரிப் பகுதியிலும் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரைச் சந்தித்து அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும், அரசு பள்ளியில் சேர்க்க வேண்டியும், ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் பள்ளியில் உள்ள சிறப்பு கற்றல்/கற்பித்தல் வசதிகள் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறப்பட்டது. இப்பயணத்தில்  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி, ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுனர் திரு சிவபிரகாசம் ஆகியோரும் மாணவர்கள் சிலரும் கலந்துக் கொண்டனர்.