புதன், 2 மார்ச், 2016

தமிழ் இணையப் பயிலரங்கு........


கிருஷ்ணகிரி, தருமபுரி  மாவட்டங்களில் பணிபுரியும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 33 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான 10 நாள் தலைமைப் பண்பு வளர் பயிற்சி  கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலக பயிற்சி அரங்கில் நடைபெற்றது.
இதில் ஒருநாள் நிகழ்வாக தமிழும் – இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயிலரங்கை நான் நடத்தினேன்.
அதில் தமிழ் இணைய தோற்றம், வளர்ச்சி, தற்போதைய நிலை, எதிர்காலத் தேவை, பள்ளிக் கல்வியில் இதன் பயன்பாடு என்ற அளவில் மிக விரிவாக படக்காட்சிகளோடு விளக்கினேன்.
பின்னர் மின்னஞ்சல் உருவாக்கம், அதன் மூலம் வலைப்பூ உருவாக்கம், அதை பள்ளிக் கல்வி, மாணவர் வளர்ச்சி ஆகியவற்றிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து செயல் விளக்கமும், நேரடியாக வலைப்பூ உருவாக்கி அதில் படங்களையும், செய்திகளையும் பதிவேற்றம் செய்து காண்பிக்கப்பட்டது. இது அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளித்தது.
பின்னர் தமிழ் விக்கிபீடியா தொடர்பான பல்வேறு செய்திகளையும் அதில் நாம் நமது படைப்புகளை உள்ளீடு செய்வது பற்றியும் விரிவாக விளக்கினேன்.  
தொடந்து கற்றல்/கற்பித்தலுக்கு பயன் தரும் இணையதளங்கள் 50க்கும் மேற்பட்டவை அறிமுகம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக