சனி, 2 ஜனவரி, 2016

மூன்றாம் பருவ விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா......ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (02.01.2016) மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
 விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். அப்போது அரசால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் விலையில்லா கற்றல் பொருட்களைப் அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக கல்வி கற்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். 
இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் இன்றே அனைத்து பாட நூல்களும், பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்பட்டதால் அனைவரும் மிக்க மகிழ்வடைந்தனர்.  மேலும் இரண்டாம் பருவத்தேர்வு வரும் 18.01.2016 அன்றுதான் துவங்க உள்ள நிலையில் சுமார் 20 நாட்கள் முன்னதாகவே அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்களும், பாடக்குறிப்பேட்களும் வழங்கி உள்ளது குறிப்படத்தக்கது.
. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள், திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திருமதி நா. திலகா, திரு வே. வஜ்ஜிரவேலு ஆகியோர் செய்திருந்தனர்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக