புதன், 21 அக்டோபர், 2015

பள்ளியில் விஜயதசமி விழா.......இன்று (21.10.2015) எமது பள்ளியில் கல்விக்கடவுள் என போற்றப்படும் சரஸ்வதி தேவிக்கான சரஸ்வதி பூசையும், வெற்றிக் கொண்டாட்டமான விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் ஆகியன தூய்மை செய்யப்பட்டன. பின்னர் மாணவர்களுக்கான கற்றல்/கற்பித்தல் பொருட்கள் மற்றும் பாட நூல்களும் பள்ளி அலுவலகப் பதிவேடுகள் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றதோடு மிக்க மகிழ்வையும் வெளிப்படுத்தினர்.
வியாழன், 15 அக்டோபர், 2015

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்தநாள் விழாஇன்று 15.10.2015 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா “இளைஞர் எழுச்சி நாளாக”  கொண்டாடப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட டாக்டர் அப்துல்கலாம் படத்திற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது குறித்தும், தமிழகத்தில் அது இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுவது குறித்தும் விரிவாகப் பேசியதோடு அவர் தம் வாழ் நாள் முழுமையும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முனேற்றத்திற்காகவே பயன்படுத்தியது  குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் அப்துல்கலாமின் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் அப்துல்கலாம் குறித்து எட்டாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ் தமிழிலும், ஏழாம் வகுப்பு மாணவர் பூ. தனுஷ் ஆங்கிலத்திலும் உரையாற்றினர், எட்டாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன் கவிதையையும், ஏழாம் வகுப்பு மாணவி சு. அர்ச்சனா பாடலையும்  வழங்கினர்.
முன்னதாக நடைபெற்ற அப்துல்கலாம் நிழற்படம் வரையும் போட்டியில் எட்டாம் வகுப்பு மு.சுந்தர், மு. சுரேந்தர், த. பசுபதி, சி. சஞ்சய் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர்.
பின்னர் நிகழ்வில் பங்கேற்ற மற்றும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. இலதா, திருமதி நா. திலகா, ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

உலக கைகள் கழுவும் நாள் விழா - 2015இன்று 15.10.2015 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் உலக கைகள் கழுவும் நாள்  கடைபிடிக்கப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகம் முழுமையும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் தூய்மை செய்யப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உலக கைகள் கழுவும் நாள்  நிகழ்வு நடைபெற்றது. அதில் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  உலக கைகள் கழுவும் நாள்  கடைபிடிக்கப்படுவது குறித்தும், அதற்கு காரணம் மனிதர்களுக்கு பரவும் பல்வேறு வகையான நோய்களுக்கும், குறிப்பாக வயிற்றுப்போக்குக்கும் சரியாக கைகள் கழுவாமல் உணவு உட்கொள்வதுதான் என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் எவ்வாறு கைகளை கழுவ  வேண்டும் என செய்துக்காட்டி, இதே முறையில் தினமும் அனைவரும் கைகளைக் கழுவ வேண்டும்  எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் 1 முதல் 8 வரையில் பயிலும் மாணவர்கள் பலர் தாமாக முன்வந்து கைகளை கழுவும் முறைகளை விளக்கி அனைவருக்கும் செய்து காட்டினர்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி த. இலதா, திருமதி நா. திலகா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.