சனி, 12 செப்டம்பர், 2015

சிறந்த ஆசிரியர்க்கான விருது......

            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களுக்கு, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்விக் குழுமங்களின் சார்பில் ”சிறந்த ஆசிரியர்க்கான விருது” வழங்கப்பட்டது.
               ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு க. அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பெரியார் பல்கலைக் கழகப் பதிவாளர் திரு ம. மணிவண்ணன், கல்விக் குழுமங்களின் நிறுவனர் திரு வே. சந்திரசேகரன்  ஆகியோர் சிறந்த ஆசிரியர்க்கான விருது மற்றும் சான்றிதழை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
          விழாவில் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி முதல்வர் திரு சக்கரவர்த்தி, ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி செயலர் திரு கே. செங்கோடன், நிர்வாக அலுவலர் திரு க. செல்வராஜ், ஸ்ரீ வித்யா விகாஸ் பள்ளி தலைவர் திரு சீனிவாசன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி, அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு க.யுவராஜ் உள்ளிட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் சுமார் 450 பேர் கலந்துக்கொண்டனர்.2 கருத்துகள்:

  1. விருதுபெற்ற தங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். விருது தங்களால் பெருமைப்படுகிறது.

    பதிலளிநீக்கு