சனி, 22 ஆகஸ்ட், 2015

மத நல்லிணக்க நாள்..........

 கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி மற்றும் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தில் 20.08.215ல் மத நல்லிணக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. 
                    முன்னாள் இந்தியப் பிரதமர் திரு இராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20 அன்று நாடு முழுமையும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் கொண்டாடப்பட்டது. பயிற்சி நிறுவண முதல்வர் திரு குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முதுநிலை விரிவுரையாளர் திரு மோகன் அவர்கள் அனைவரையும் வரவேற்று , சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்து வைத்தார்.
                  விழாவில் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ”மத நல்லிணக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக