செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

முப்பதாம் ஆண்டு துவக்கம்…..ஊத்தங்கரை  ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 11.08.2015 பள்ளித் தலைமை ஆசிரியரின் 30ம் ஆண்டு பள்ளி கல்விப் பணி  துவக்க நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் முதன் முதலாக 11.08.2015 அன்று, அன்றைய ஊத்தங்கரை ஒன்றியம் வடுகனூர் துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தனது பள்ளி கல்விப் பணியைத் துவக்கி 29 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 30ஆம் ஆண்டு துவங்குவதை நினைவு கூறும் வகையில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.  
பின்னர் பேசிய அவர் இந்த 30ம் ஆண்டில் கடந்த 29 ஆண்டுகள் செய்த பணியைக் காட்டிலும் கூடுதலான பணியை மேற்கொள்ள உள்ளதாகவும், அதன் முதல் கட்டமாக இந்த ஓராண்டில் (11.08.2015 முதல் 10.08.2016வரை) மட்டும் மாணவர்களின் திறனை மேம்படுத்திடவும் அவற்றை வெளிப்படுத்திடவுமான 30 சிறப்பு நிகழ்ச்சிகளை நமது பள்ளியில் நடத்திட விரும்புவதாகவும் அதற்கு அனைத்து உதவி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி அ. நர்மதா, திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியரின் 30ம் ஆண்டு கல்விப் பணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவரின் இவ்வாண்டுக்கான செயல் திட்டமான 30ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்திட முழு ஒத்துழைப்பு நல்குவதாகவும் உறுதி அளித்தனர்.  
4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நாகேந்திர பாரதி அவர்களே.....

   நீக்கு
 2. தங்களது ஆசிரிய பணி மேன்மேலும் சிறக்க எனது வாழ்த்துககள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்துக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ரவி அவர்களே.....

   நீக்கு