செவ்வாய், 28 ஜூலை, 2015

கலாமுக்கு அஞ்சலி              இன்று 28.07.2015 செவ்வாய்க்கிழமை எமது பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
             பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது உரையில் மறைந்த ஆ.ப.ஜெ. அப்துல்கலாம். அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக இருந்தது மட்டுமல்லாமல் இந்தியாவை வல்லரசாக்க பாடுபட்டவர். இந்தியாவின் எதிர்காலமே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என உறுதியாக நம்பியவர் எனவும் அதனாலேயே தனது வாழ்வின் கடைசி நிமிடத்தைக் கூட மாணவர்களுடனேயே கழித்து தன்னுயிரை விட்டுள்ளார் எனவும் கூறி அவரின் தியாகங்களை பின்பற்றி நாமும் இந்நாட்டிற்காக தொண்டாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.
            நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

2 கருத்துகள்:

  1. ஆழ்ந்த இரங்கல்கள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.....

      நீக்கு