புதன், 1 ஜூலை, 2015

அலுவலக உதவியாளருக்கு - பணிநிறைவு பாராட்டு விழா......

 
           ஊத்தங்கரை ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில்  கடந்த 18 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த திரு எல். சாக்கன் அவர்கள் இன்று பிற்பகல் (30.06.2015) தனது அரசுப் பணியை நிறைவு செய்தார். அதன் பொருட்டு அவருக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சார்பில் பாராட்டுவிழா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 
         இதுவரையில் இவ்வலுவலகத்தில் யாருக்குமே நடைபெறாத அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திரு இர. பிரசாத், திருமதி த. மகேஸ்வரி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் திரு செ. வெங்கடேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து சங்கங்களின் வட்டாரப் பொருப்பாளர்களும், ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துக்கொண்டனர்.
           அப்போது பேசிய அனைவரும் திரு சாக்கன் அவர்களின் கடந்த கால பணிகளை நினைவு கூர்ந்ததோடு,  60 வயது நிறைவடையும் இன்று கூட மிகச் சுறுசுறுப்போடும், மிக்க ஈடுபாட்டோடும் பணியாற்றி வந்தமை பற்றி எடுத்துக் கூறி பெருமிதம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக