செவ்வாய், 7 ஜூலை, 2015

பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் - 2015இன்று 05.07.2015 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.

முன்னதாக போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்துவதன் அவசியம் பற்றியும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கு இப்போட்டிகள் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி  போட்டிகளைத் துவக்கி வைத்தார்
பின்னர் பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நான்கு சுற்று போட்டிகளுக்குப் பின் கீழ்க்கண்ட  மாணவர்கள் முதல் இரண்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பபட்டனர்.

1 முதல் 5 வகுப்புப் பிரிவு :
                ஆண்கள்                     பெண்கள்
முதலிடம்       :     கு. விஷ்ணு                வே. கலையரசி
இரண்டாமிடம்   :     மா. இளவரசன்             சி. கோபிகா

6 முதல் 8 வகுப்புப் பிரிவு :

முதலிடம்       :     நா. தினேஷ்                வே. சர்மிளா
இரண்டாமிடம்   :     மு. சுந்தர்                  சு. அர்ச்சனா

அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக