திங்கள், 16 மார்ச், 2015

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்...


      எமது பள்ளியில் இன்று (16.03.2015) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. 
      பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னதாக பள்ளீயின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் பள்ளியின் தற்போதைய  வளர்ச்சி நிலைகள் பற்றியும், மாணவர்களின் திறன் வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி, பள்ளி ஆண்டு  விழா நடத்துவது தொடர்பான தனது கருத்துக்களையும் எடுத்துரைத்தார். இதற்கு பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை எனவும் வலியுறுத்தினார்.
       பின்னர் அனைத்து பெற்றோர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

* பள்ளியின் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது.
*அதற்கு அனைத்து பெற்றோர்களும் முழுமையாக ஒத்துழைப்பு 
      நல்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
* ஆண்டு விழாவில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அனைத்து கல்வி 
     அலுவலர்களையும் அழைத்து சிறப்பு செய்தல்.
* விழாவில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு
     நிகழ்விலாவது பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகளை அமைத்தல்.
            இன்றைய கூட்டத்தில் பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கனகராணி, உள்ளிட்ட பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
       இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக