திங்கள், 2 மார்ச், 2015

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.....


         ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ப்ளோரோசிஸ் விழிப்புணர்வு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற உயர்நிலை/மேல்நிலை மற்றும் உயர் துவக்கப் பள்ளி  மாணவ்ர்களுக்கான பரிசுகள் வ்ழங்கும் விழா ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு பொ. பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற் பொறியாளர் திரு எஸ்.செல்வராஜ் அவர்கள் பரிசும், சான்றிதழ்களும் வழங்கினார். 
             இவ்விழாவில் ஊத்தங்கரை ஒன்றிய உயர்துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும்  கலந்துக்கொண்டனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக