செவ்வாய், 11 நவம்பர், 2014

கல்வி உரிமை நாள் விழா


        இன்று 11.11.2014 செவ்வாய்க்கிழமை எமது பள்ளியில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம் கல்வி உரிமை நாள்  விழா வாகக் கொண்டாடப்பட்டது.

      பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்  முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா அனைவரையும் வரவேற்றார்.  பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் கல்வி உரிமைநாள் விழாவின் அவசியம் மற்றும் இவ்விழா கொண்டாடப்படுவதன் காரணம் ஆகியவை குறித்தும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும் தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்திய கல்வி அமைச்சராகப் பணியாற்றி, இந்திய கல்வி முறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை பற்றியும் விரிவாக பேசியதோடு அனைவரும் தரமான கல்வியை கற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
       பின்னர் மாணவர்கள் கல்வி உரிமைநாள் தொடர்பான பேச்சு, மற்றும் பாடல் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர் செல்வி த. லதா பெண்கல்வி குறித்து பேசினார்.
       இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக