திங்கள், 13 அக்டோபர், 2014

கொடுப்பதில் மகிழ்வு வாரவிழாஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலைப்பூ : www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல் : pumsjothinager@gmail.com
இன்று (13.10.2014) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழாமிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி மாணவர்களிடம் பிறர்க்கு உதவும் மனப்பான்மையை ஏற்படுத்தவும், அடுத்தவர்க்கு கொடுப்பதன் மூலம் தாம் மகிழ்ச்சி கொள்ளும் பண்பை வளர்த்திடவும் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது . அதன்படி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் தமது உரையில் இவ்விழாவின் நோக்கம் பற்றியும், அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார். தொடர்ந்து அவர் தமது உரையில்  அடுத்தவரிடமிருந்து நாம் பெறும்போது நாம் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறோம், ஆனால் நாம் அடுத்தவருக்கு கொடுப்பதன் மூலம் பெற்றவர் மகிழ்ச்சி அடைவதோடு அவருடன் சேர்ந்து நாமும் மகிழ்ச்சி அடைகிறோம் இதன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி நமக்கு கிடைக்கிறது எனக் கூறினார்.
பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் பள்ளியின் மூலம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மாணவர்கள் தாம் தயாரித்து கொண்டுவந்திருந்த கலைப் பொருட்களை தமக்கு பிடித்த நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு இரா. முரளி, திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.   வியாழன், 9 அக்டோபர், 2014

சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு........

               இன்று (09.10.2014)  ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
            பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டும்,  பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி ”தூய்மையான பாரதம் - தூய்மையான பள்ளி” என்ற நோக்கத்தை நிறைவு செய்திடும் பொருட்டும் எமது பள்ளியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  இணைந்து ”சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி”யை ஏற்றனர்.

புதன், 8 அக்டோபர், 2014

பள்ளியில் சரஸ்வதி பூசை.........
இன்று எமது பள்ளியில் விஜயதசமி, சரஸ்வதி பூசை கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்களால் பள்ளியின் வகுப்பறைகள், சுற்றுப்புறம் ஆகியன சுத்தம்செய்யப்பட்டது. அடுத்து அன்றாட கற்றல் / கற்பித்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தூய்மை செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற பூசைக் கொண்டாட்டத்தில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்வோடு பங்கேற்றனர்.