ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

எமது பள்ளியில் - அறிவியல் கண்காட்சிஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 21.08.2014 பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
        முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், கண்காட்சியை ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி அவர்கள் துவக்கி வைத்தார். பின்னர் அவர் மாணவர்களின் அனைத்து படைப்புகளையும் முழுமையாக பார்த்து, ஓர் தனிப் பள்ளி இவ்வளவு கூடுதலான படைப்புகளை காட்சிப்படுத்தி இருப்பதற்கு  மகிழ்ச்சி அடைவதாகக் கூறி தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.  
           கண்காட்சி நிகழ்வில் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆசிரியர் கு. கணேசன் அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
      கண்காட்சியை ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. இர. பிரசாத், கெங்கபிராம்பட்டி, கணக்கம்பட்டி, கொண்டம்பட்டி, துரிஞ்சிப்பட்டி, உள்ளிட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரும் வந்து பார்வையிட்டனர்,
       கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு இரா. முரளி, திரு, வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் சிறப்பாக செய்தனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக