வியாழன், 24 ஜூலை, 2014

குறு வளமைய அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்


இன்று 24.07.2014 – ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குறு வளமைய அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 
     முன்னதாக சதுரங்கப் போட்டிகளை ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியரும் மைய ஒருங்கிணைப்பாளருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது அவர் சதுரங்க விளையாட்டுகளில் பங்கு பெறுவதால் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும் எனவும், படிப்பில் முழுமையாக ஈடுபட இது உதவும் எனக் கூறி போட்டியின் விதிமுறைகளை தெளிவாகக் கூறி துவக்கி வைத்தார். 
          போட்டிகள்  .1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும். 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் நடைபெற்றது.
          இறுதியில் 6 - 8 வகுப்பு பிரிவில் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி மாணவர் அ. நவீன், நாப்பிராம்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவர் எம். சரண்  ஆகியோரும், 1 - 5 வகுப்பு பிரிவில் நாப்பிராம்பட்டி பள்ளி மாணவர்கள் ஆர். வேடியப்பன், டி. ஐஸ்வர்யா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக