வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

ஊத்தங்கரை சரக அளவிலான சதுரங்கப் போட்டி........

     இன்று 31.07.2014 ஊத்தங்கரை சரக அளவிலான சதுரங்கப் போட்டிகள் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 
         காலை சுமார் 9.30 மணியளவில் துவங்கிய போட்டிகள் மாலை 4 மணி வரையில்  தொடர்ந்து பல சுற்றுகளாக நடைபெற்றது. இதில் ஊத்தங்கரை, மத்தூர்  ஒன்றியங்களைச் சேர்ந்த 280க்கு மேற்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளைச் சேர்ந்த  350 மாணவர்கள் பங்கு பெற்றனர். இப்போட்டிகள் 10 வயதுக்கு குறைவானவர்கள், 14 வயதுக்கு குறைவானவர்கள்,  17 வயதுக்கு குறைவானவர்கள்,  19 வயதுக்கு குறைவானவர்கள்  என 4 பிரிவுகளில் ஆண்கள் - பெண்கள் என பிரித்து நடத்தப்பட்டது.
              இப்போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்ற அனைத்து நிலை மாணவர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு விளையாடியது பார்க்க பரவசமாய் இருந்தது.
         இப்போட்டிகளில் கீழ்க்கண்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

10 வயதுக்கு குறைவானவர்கள் :
ஆண்கள் :
1. இரா. வேடியப்பன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, நாப்பிராம்பட்டி. ஊத்தங்கரை
2. பி. குருபிரசாத், ஊ.ஒ.ந.நி.பள்ளி, சின்னகாரப்பட்டு. ஊத்தங்கரை
3. அ. சிவகிரி, ஊ.ஒ.து.பள்ளி, மிட்டப்பள்ளி. ஊத்தங்கரை
பெண்கள் :
1. ஜெ. ஐஸ்வர்யா, ஊ.ஒ.ந.நி.பள்ளி, நாப்பிராம்பட்டி. ஊத்தங்கரை
2. ஜி. தேன்மொழி, ஊ.து.நி.பள்ளி, நாட்டாண்மைக்கொட்டாய். ஊத்தங்கரை
3. க. பவித்ரா, ஊ.ஒ.து.பள்ளி, ரங்கனூர். மத்தூர்
11 - 14 வயதுக்குட்பட்டோர் :
ஆண்கள் :
1. டி. அபின்மன்யூ, ஊ.ஒ.ந.நி.பள்ளி, பெருமாள்நாய்கன்பட்டி. ஊத்தங்கரை
2. இரா. பாரதிராஜா, அ.மே.நி.பள்ளி, பெரியதள்ளப்பாடி, ஊத்தங்கரை
3. அ. நவீன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஜோதிநகர். ஊத்தங்கரை
பெண்கள் :
1. வி. சர்மிளா, அ.பெ.மே.நி.பள்ளி, கல்லாவி, ஊத்தங்கரை
2. கி. கீர்த்தனா, ஊ.ஒ.ந.நி.பள்ளி, படப்பள்ளி. ஊத்தங்கரை
3. இர. வைத்தீசுவரி, அ.உ.நி.பள்ளி, பா.எட்டிப்பட்டி, ஊத்தங்கரை
       பிற்பகல் நடைபெற்ற நிறைவு விழாவில் இன்றைய போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
        விழாவில் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு எம்.ஜி. ஜெயபால் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக்கொண்ட ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி, சிங்காரப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு அ. வி. விஜயகுமாரன், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கான அறிவுரை மற்றும் ஊக்க ஆலோசனைகளையும், விழாவுக்கான வாழ்த்துரையும் வழங்கினர். இறுதியில் சிங்காரப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு புருசோத்தமன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக