வியாழன், 24 ஜூலை, 2014

குறு வளமைய அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்


இன்று 24.07.2014 – ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குறு வளமைய அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 
     முன்னதாக சதுரங்கப் போட்டிகளை ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியரும் மைய ஒருங்கிணைப்பாளருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது அவர் சதுரங்க விளையாட்டுகளில் பங்கு பெறுவதால் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும் எனவும், படிப்பில் முழுமையாக ஈடுபட இது உதவும் எனக் கூறி போட்டியின் விதிமுறைகளை தெளிவாகக் கூறி துவக்கி வைத்தார். 
          போட்டிகள்  .1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும். 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் நடைபெற்றது.
          இறுதியில் 6 - 8 வகுப்பு பிரிவில் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி மாணவர் அ. நவீன், நாப்பிராம்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவர் எம். சரண்  ஆகியோரும், 1 - 5 வகுப்பு பிரிவில் நாப்பிராம்பட்டி பள்ளி மாணவர்கள் ஆர். வேடியப்பன், டி. ஐஸ்வர்யா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.























சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்



ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலைப்பூ: www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல்: pumsjothinager@gmail.com
===============================
சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்
இன்று 23.07.2014 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
     முன்னதாக சத்ரங்கப் போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது அவர் சதுரங்க விளையாட்டுகளில் பங்குபெறுவதால் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும் எனவும், படிப்பில் முழுமையாக ஈடுபட இது உதவும் எனக் கூறினார்.
 பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள்  திருமதி மு. இலட்சுமி, திரு. இரா. முரளி, திரு தீ. சிவராமன், திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி . நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்.














செவ்வாய், 15 ஜூலை, 2014

கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள் விழா



கல்வி வளர்ச்சி நாள் விழா
இன்று  15..07.2014.ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
                முன்னதாக பட்டதாரி உதவி ஆசிரியை திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  விழாவிற்கு தலைமை தாங்கினார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் இலக்கிய பேச்சு, மற்றும் கவிதை, பாடல்கள் மூலம் காமராசர் பெருமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி ஆசிரியர்கள் திரு தீ சிவராமன், திரு வே. வஜ்ஜிரவேலு, திருமதி அ. நர்மதா ஆகியோர் காமராசர் குறித்து பல தலைப்புகளில் பேசினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தனது சிறப்புரையில்  காமராசரின் வாழ்க்கை ஓர் திறந்த புத்தகம் எனத் துவங்கி அவர் தமிழக கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய அளவில்லா பணிகள் மற்றும் தமிழகத்தில் தொழில்துறை, விவசாயத்துறை உள்ளிட்டவை பெரும் வளர்ச்சி பெறுவதற்கு ஆற்றிய தொண்டு, அவரின் அரசியல் வாழ்க்கை, சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கு என எல்லாச் சிறப்புகளையும் பட்டியலிட்டு விளக்கிப் பேசினார்.
பின்னர் தமிழில் உரையாற்றிய ஏழாம் வகுப்பு மாணவர் நா. தினேஷ், ஆங்கிலத்தில் உரையாற்றிய ஏழாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன், கவிதை வாசித்த ஏழாம் வகுப்பு மாணவி கு. ஜீவா, பாடல்கள் பாடிய ஏழாம் வகுப்பு மாணவிகள் ஆ. கீர்த்தனா, வே. சர்மிளா, நான்காம் வகுப்பு மாணவிகள் ச. இனியா, சி. கோபிகா, திருக்குறளை பொருளுரையுடன் கூறிய நான்காம் வகுப்பு மாணவி ச. இனியா ஆகியோருக்கும் ஆங்கிலத்தில் 50க்கும் மேற்பட்ட காய்கறிகள், பழங்கள், விலங்குகள், ஆகியவற்றின் பெயர்களைக் கூறிய முதல் வகுப்பு மாணவர்கள் மு. பேரரசு, க. பாலமுருகன், உடல் உறுப்புகளின் பெயர்களைக் கூறிய செ. திவ்யா, கு. காவ்யா, பாடல்கள் பாடிய ம. சுபா, பெ. கீர்த்திகா  ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பட்டதாரி உதவி ஆசிரியர் திரு. ச. முரளி அனைவருக்கும் நன்றி கூறினார்.