வியாழன், 5 ஜூன், 2014

உலக சுற்றுச் சூழல் தின விழா

                    இன்று (05.06.2014) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தின விழா நடைபெற்றது.
     முன்னதாக சுற்றுச் சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வந்தனர்.
     பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. அதில் மாணவர்கள் சுற்றுச் சூழல் தொடர்பான தனது படைப்புகளை வெளியிட்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
     விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, மு. இலட்சுமி, அ. நர்மதா ஆகியோர் பங்கேற்றனர். கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக