செவ்வாய், 10 ஜூன், 2014

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
வலைப்பூ :www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல் : pumsjothinager@gmail.com
**********************
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி

இன்று 09.06.2014 திங்கட்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி  நடத்தப்பட்டது.

தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு ஆணைக்கினங்க ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேமி்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களை பேரணியில் முழங்கி வந்தனர்.

பேரணி பள்ளி அமைந்துள்ள ஜோதிநகர் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியே சென்றது.

பேரணியின் இறுதியில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தற்போதைய சூழலில் தண்ணீர் பற்றாக்குறை என்பது உலகம் முழுமையும் உள்ள நிலையில் நமது நாட்டில் அதை சமாளிக்கும பொருட்டு மழைநீரை சேமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், மழைநீர் சேமிக்கும் பல்வேறு வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

பேரணியில் உதவி ஆசிரியர்கள் திருமதி சு சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல் திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக