வெள்ளி, 21 மார்ச், 2014

உலக வனநாள் விழாஇன்று 21.03.2014 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக வனநாள்  விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி மாணவர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி சுற்றுச் சூழல் மன்றப் ஒருங்கினைப்பாளர் திருமதி மு.இலட்சுமி  உதவி ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமைஆசிரியர் தமது தலைமை உரையில் உலக வனநாள் விழாவின் அவசியம் மற்றும் வனங்களால் நமக்கு ஏற்படும் நண்மைகள் குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டுமெனவும் மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் உலக வனநாள் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி சு சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல் திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக