சனி, 1 பிப்ரவரி, 2014

தலைமை ஆசிரியர்கள் கூட்டம்இன்று 31.01.2014 எமது ஒன்றிய அனைத்து தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது
முன்னதாக தமிழ்த் தாய் வாழ்த்திற்கு பிறகு கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார், கூட்டத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு டி. துரைசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டார். உடன் மழலையர் பள்ளிகளின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. நாகராஜு, அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி அ. மரியரோஸ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் ஆசிரியர்களின் கற்றல்/ கற்பித்தல் பணி மற்றும் பள்ளிகளின் மேம்பாடு குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.   
பின்னர் கடந்த 26.01.2014 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விருது பெற்று வந்துள்ள ஆசிரியர்கள் திருவேங்கடம், செந்தில்குமார் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
கூட்டத்தில் வந்து கலந்துக்கொண்ட ஒன்றிய வளமைய முன்னாள் மேற்பார்வையாளர் திரு சி. சிவராமன் அவர்கள் தம்து பணிக்காலத்தில் நல்ல ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் நன்றி கூறினார். ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவருமான திரு செ. இராஜேந்திரன் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இறுதியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத் அனைவருக்கும் நன்றி கூறினார்.1 கருத்து:

  1. அருமையான படங்கள் மூலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு