வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

கல்வி உதவித் தொகை வழங்கல்........


   இன்று எமதுபள்ளியில் 3,4,5 மற்றும் 6ஆம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட/பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. 
           எமது பள்ளியில் தற்போது பயிலும் 3,4,5 வகுப்பு பயிலும் 3 தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ 500 வீதமும்,  3,4,5 வகுப்பு பயிலும் 13 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ 500 வீதமும், 6ம் வகுப்பு பயிலும் 5 மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ 1000 வீதமும் சம்மந்தப்பட்ட மாணவிகளின் தாயார் பெயரில் உள்ள அஞ்சலக சேமிப்புக் கணக்கில் செலுத்தி அதற்கான சேமிப்புப் புத்தகம் இன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது.
            பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் இத்தொகை அவர்களுக்கு மிகவும் பயன்படும்.
           வியாழன், 20 பிப்ரவரி, 2014

மாவட்டத்தில் முதல் இணைய இணைப்பு பெற்ற பள்ளி


           பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் (Collaborative Learning through Connecting Class Room across Tamil Nadu) செயல்படுத்தப்பட உள்ளது.

      மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்னோடிப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறைக் கல்வியை மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும், பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
              அதன் அடிப்படையில் மாவட்டத்திற்கு நான்கு பள்ளிகள் வீதம் மாநில அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் முதல் கட்டமாக பள்ளிகளுக்கு அகன்ற கற்றை இணைய இணைப்பு (BROAD BAND) பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
         அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி பாரத் சஞ்சார் நிகாம் (BSNL) மூலம் அகன்ற கற்றை இணைய இணைப்பு பெற்ற முதல் பள்ளியாகத் திகழ்கிறது. 
      இப்பள்ளியின் இணைய சேவை இன்று மானவர்கள் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 
       இதன் மூலம் இப்பள்ளியில் இனி இணைய வழி கற்றல்/கற்பித்தல் நிகழ்வு நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
                  இச்சேவையை மாவட்டத்தில் முதல் முறையாகப் பெற்றமைக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு டி. துரைசாமி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொமா. சீனிவாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சனி, 1 பிப்ரவரி, 2014

தலைமை ஆசிரியர்கள் கூட்டம்இன்று 31.01.2014 எமது ஒன்றிய அனைத்து தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது
முன்னதாக தமிழ்த் தாய் வாழ்த்திற்கு பிறகு கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார், கூட்டத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு டி. துரைசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டார். உடன் மழலையர் பள்ளிகளின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. நாகராஜு, அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி அ. மரியரோஸ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் ஆசிரியர்களின் கற்றல்/ கற்பித்தல் பணி மற்றும் பள்ளிகளின் மேம்பாடு குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.   
பின்னர் கடந்த 26.01.2014 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விருது பெற்று வந்துள்ள ஆசிரியர்கள் திருவேங்கடம், செந்தில்குமார் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
கூட்டத்தில் வந்து கலந்துக்கொண்ட ஒன்றிய வளமைய முன்னாள் மேற்பார்வையாளர் திரு சி. சிவராமன் அவர்கள் தம்து பணிக்காலத்தில் நல்ல ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் நன்றி கூறினார். ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவருமான திரு செ. இராஜேந்திரன் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இறுதியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத் அனைவருக்கும் நன்றி கூறினார்.